கேரள உள்ளாட்சி அமைப்பில் மறு சீரமைத்த வார்டு பட்டியல் வெளியீடு
கேரள உள்ளாட்சி அமைப்பில் மறு சீரமைத்த வார்டு பட்டியல் வெளியீடு
ADDED : செப் 11, 2024 12:44 AM
மூணாறு : கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளில் மறு சீரமைக்கப்பட்ட வார்டு பட்டியலை அரசு வெளியிட்டது.
இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக வார்டுகள் மறு சீரமைக்கப்பட்டு, அதன் பட்டியலை அரசு வெளியிட்டது. அதன்படி மாநிலத்தில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் 1577 வார்டுகள் அதிகரித்தன. 941 ஊராட்சிகளில் 1375 வார்டுகள் அதிகரிக்கப்பட்டு, அதன் எண்ணிக்கை 15,962ல் இருந்து 17,337 ஆக அதிகரித்துள்ளது. 152 ஊராட்சி ஒன்றியங்களில் 2080ல் இருந்து 2267 ஆக வார்டுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. மாநிலத்தில் உள்ள 15 மாவட்ட ஊராட்சிகளிலும் வார்டுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் வார்டுகள் மறு சீரமைக்கப்படவில்லை.
அதிகரிப்பு
இடுக்கி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் ஒரு வார்டும், மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களில் தலா ஒரு வார்டு வீதமும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில் 41 ஊராட்சிகளில் வார்டுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
குறைவு
அதே சமயம் மூணாறு, பீர்மேடு ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு வார்டு வீதம் குறைக்கப்பட்டன.
மூணாறு ஊராட்சியில் 21ல் இருந்து 20 ஆகவும், பீர்மேடு ஊராட்சியில் 17ல் இருந்து 16 ஆகவும் வார்டுகள் குறைக்கப்பட்டு உள்ளன.