ADDED : செப் 14, 2024 08:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தெற்கு டில்லி நடைபாதைகளில் ஏற்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அப்புறப்படுத்தினர்.
டில்லி மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், டில்லி ஐ.ஐ.டி., கேட் முதல் தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனம் வரை சாலை மற்றும் நடைபாதையில் ஆக்கிரமித்து இருந்த கடைகளை அப்புறப்படுத்தினர். அதேபோல, நடைபாதை மற்றும் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. வாரந்தோறும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.