தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பஸ்களுக்கு தனிப்பாதை அரசிடம் வேண்டுகோள்

பஸ்களுக்கு தனிப்பாதை அரசிடம் வேண்டுகோள்

பஸ்களுக்கு தனிப்பாதை அரசிடம் வேண்டுகோள்


ADDED : செப் 14, 2024 08:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 08:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பஸ்களுக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும் என, மாநில அரசை கிரீன் பீஸ் இந்தியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கிரீன் பீஸ் அமைப்பின் அதிகாரி சரத் கூறியதாவது:

இதற்கு முன்பு வெளிவட்ட சாலையில், தனி பஸ் பாதை அமைக்கப்பட்டபோது, பயணியர் எண்ணிக்கை அதிகரித்தது. தனிப்பாதை அகற்றப்பட்டதால், போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது.

சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், மகளிர் பயணியர் எண்ணிக்கை, மேலும் அதிகரித்தது. இதை கருத்தில் கொண்டு, பஸ்களுக்கு தனிப்பாதை அமைக்க அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயணியர் வசதிக்காக, 15,000 கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். பயணியருக்கு பாதுகாப்பான, சிறப்பான போக்குவரத்து இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.

பெங்களூரில் 11 பஸ் பாதைகள் அமைக்க வேண்டும். வெளிவட்ட சாலையில் ஏற்கனவே இருந்த, தனி பஸ் பாதையை மீண்டும் திறக்க வேண்டும். இது தொடர்பாக, 25,995 பொது மக்களின் கையெழுத்துடன், அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நாகசந்திராவில் இருந்து கே.ஆர்., மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு, பஸ்சில் சென்றால் இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது. பஸ்களுக்கு தனிப்பாதை இருந்தால், பயண நேரம் குறையும். நாங்கள் மெட்ரோ ரயிலுக்கு பதிலாக, சக்தி திட்டத்தின் கீழ் இலவசமாக பஸ்சில் பயணம் செய்வோம். எங்களுக்கு பணம் மிச்சமாகும்.

- ஜெயமாலா, கார்மென்ட்ஸ் ஊழியர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us