ADDED : மார் 03, 2025 01:17 AM
நாகர்கர்னுால், லுங்கானாவின் நாகர்கர்னுால் மாவட்டத்தில், ஸ்ரீசைலம் அணையில் சுரங்கம் வெட்டப்படுகிறது. இந்த சுரங்கப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, கடந்த பிப்., 22ல் சுரங்கத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதில், எட்டு தொழிலாளர்கள் சிக்கினர்.
இவர்களை மீட்கும் பணி, 10வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்நிலையில், நிலத்தை ஊடுருவிப் பார்க்கும் ரேடார் கருவியைக் கொண்டு தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்தபோது, இறுகிய வண்டல் மண்ணுக்குள் நான்கு பேர் புதைந்து கிடப்பது நேற்று முன்தினம் உறுதியானது.
இதையடுத்து, வண்டல் மண் குவியலை அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டபோது, மேலும் சிலர் சிக்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என, அம்மாநில அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.