ADDED : மே 06, 2024 05:08 AM

பெலகாவி ''தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, சில்லறை அரசியல் செய்யவில்லை,'' என்று, சிக்கோடி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா கூறினார்.
சிக்கோடி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா நேற்று அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் இளம்தலைமுறையினருக்கு 'சீட்' கொடுத்து இருப்பதை, பா.ஜ., தலைவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. சிக்கோடி தொகுதியில் எனக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனால் மக்களை குழப்புவதற்காக, எங்கள் குடும்பத்தை பற்றி பா.ஜ.,வினர் அவதுாறு பரப்புகின்றனர்.
சதீஷ் ஜார்கிஹோளி குடும்பத்தினர் சட்டவிரோதமாக சுரங்க தொழில் செய்கின்றனர் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொய் பேசி உள்ளார். நேர்மையான முறையில், மக்களை சந்தித்து ஆதரவு கேட்கிறோம்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, சில்லறை அரசியல் செய்யவில்லை. நான் எம்.பி., ஆனால் சிக்கோடியில் தான் இருப்பேன். டில்லியில் தங்க மாட்டேன். சிக்கோடியில் ஐ.டி., மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.