ADDED : மார் 31, 2024 11:07 PM

சிக்கபல்லாப்பூர்: சிக்கபல்லாப்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் சுதாகர் நேற்று அளித்த பேட்டி:
சிக்கபல்லாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரக் ஷா ராமையா பணக்காரர். நான் சாதாரண பா.ஜ., தொண்டன். இதனால் 'பணக்காரன் வெர்சஸ் வேலைக்காரன்' இடையிலான தேர்தல் நடக்க உள்ளது. தொகுதியில் என்ன பிரச்னை உள்ளது என்று, நன்கு தெரியும்.
முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, சிவசங்கர் ரெட்டி ஆகியோருக்கு 'சீட்' தராமல், ரக் ஷா ராமையாவுக்கு கொடுத்தது ஏன்? யாராக இருந்தாலும், காங்கிரஸ் வேட்பாளர், எனக்கு போட்டியாளர் தான்.
எங்கள் கட்சி எம்.எல்.ஏ., விஸ்வநாத் தன் மகன் அலோக்கிற்கு சீட் எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி ஏற்படுவது இயல்பு தான். அவரிடம் பேசி சரிசெய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சட்டசபை தேர்தலில், சிக்கபல்லாப்பூர் தொகுதியில் சுதாகரை எதிர்த்து வெற்றி பெற்ற, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், பிரசாரத்தின்போது சுதாகரை 'பணக்காரர்' என்று கூறினார். 'பணக்காரரா'; 'அனாதை பையனா' என, பிரசாரம் செய்தார்.
தற்போது பிரதீப் ஈஸ்வர் பாணியில், 'பணக்காரன் வெர்சஸ் வேலைக்காரன்' என, சுதாகர் தத்துவம் பேச ஆரம்பித்து உள்ளார்.

