ADDED : மே 08, 2024 04:55 AM

உடுப்பி பிரபல நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, தான் படித்த பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டார்.
உடுப்பி, குந்தாபுராவின் கெராடி கிராமத்தின் தொடக்க பள்ளியில், ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. காந்தாரா நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இதே பள்ளியில் தான் படித்தார். நேற்று மதியம் இங்கு வந்து மகிழ்ச்சியுடன் ஓட்டுப்பதிவு செய்தார்.
பின் அவர் கூறியதாவது:
ஓட்டுப்பதிவு செய்வது நமது உரிமை. அது ஒவ்வொருவரின் பொறுப்பு. அந்த பொறுப்பை நான் நிறைவேற்றினேன். காலையில் அதிகமான மக்கள் இருப்பர். மதியம் வந்தால் விரைவில் ஓட்டு போட்டு செல்லலாம் என, இப்போது வந்தேன்.
மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கும் அரசின் மீதுள்ள எதிர்பார்ப்பு குறித்து, இப்போதே கூறினால் அது அரசியலாகி விடும். எனவே அதுபற்றி பேச வேண்டாம்.
நான் படித்த பள்ளியை மேம்படுத்தும் பணிகளை துவக்கியுள்ளோம். தேர்தல் என்பதால் பணிகளை நடத்த முடியவில்லை. முதற்கட்டமாக மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது.
கட்டட சீரமைப்பு, பெயின்டிங், புதிய உபகரணங்களை பொருத்தும் பணிகளை விரைவில் துவங்க ஆலோசிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

