தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : மே 25, 2024 10:39 PM

தங்கவயல், சாலை பாதுகாப்பு குறித்து தங்கவயல் போலீஸ் மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்பது போலீஸ் நிலையங்களில் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
தங்கவயல் போலீஸ் மாவட்டத்துக்கு உட்பட்ட ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலையத்தின் அருகே உள்ள சுராஜ்மல் சதுக்கம், பஸ் நிலையம், பிரிட்சர்ட் சாலை ஆகிய இடங்களில் எஸ்.ஐ., சதீஷ் தலைமையிலும், ஆண்டர்சன் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பஸ் நிலையம், ஆண்டர்சன்பேட்டை சதுக்கத்தில் எஸ்.ஐ., சேத்தன் குமார்; பெமல் நகர் போலீஸ் நிலையத்தின் ஆலமரம் பகுதியில் எஸ்.ஐ., ஜெகதீஷ்;
உரிகம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட முதல் நிலைக் கல்லூரி, சுத்தார் சதுக்கத்தில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், எஸ்.ஐ., ராஜேஸ்வரி; பேத்தமங்களா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பேத்தமங்களா சதுக்கம், பங்காரு திருப்பதி சதுக்கத்தில் எஸ்.ஐ., குரு ராஜ் சிந்தக்கல், கேசம்பள்ளி சதுக்கத்தில் எஸ்.ஐ., சங்கமேஷ்; பூதிக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் எஸ்.ஐ., சுனில் இரோடகி;
காமசமுத்ரா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் எஸ்.ஐ., பாலாட்சி பிரபு; பங்கார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் எஸ்.ஐ., சீனிவாஸ் தலைமையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் வாகன ஓட்டுனர்கள், வியாபாரிகள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.