ADDED : பிப் 25, 2025 10:36 PM
மாண்டியா: நாகமங்களாவில் வங்கி ஒன்றில் கொள்ளை முயற்சி நடந்ததால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கர்நாடகாவில் பல இடங்களில் வங்கி கொள்ளை அதிகரித்துள்ளது. சமீபத்தில் பீதர், பெலகாவியில் வங்கி கொள்ளை நடந்தது. தற்போது மாண்டியாவில் வங்கி கொள்ளை முயற்சி நடந்தது.
மாண்டியா, நாகமங்களாவின் தேவலாபுரா கிராமத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி கிளை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்ம கும்பல் வங்கியின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்தது. லாக்கர் பூட்டை உடைக்க முயற்சித்தனர்; முடியாததால் தப்பி சென்றனர்.
நேற்று காலையில், கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கவனித்த அப்பகுதியினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த நாகமங்களா ஊரக போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சுற்றுப்பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை பிடிக்க முயற்சிக்கின்றனர்.

