ADDED : மார் 13, 2025 12:34 AM
பெங்களூரு : நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் போலீசாருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்த சி.ஐ.டி.,க்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நேற்று திரும்பப்பெறப்பட்டது.
துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கடத்திய நடிகை ரன்யா ராவ், 33, கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
இந்த விவகாரத்தில் போலீசாருக்கு பங்கு உள்ளதாக என்பது பற்றி விசாரிக்க, சி.ஐ.டி.,க்கு அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவு நேற்று திரும்பப் பெறப்பட்டது.
ரன்யா ராவ் தந்தையான கூடுதல் டி.ஜி.பி., ராமசந்திர ராவுக்கு வழக்கில் பங்கு உள்ளதா என்பதை பற்றி விசாரிக்க, கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா தலைமையில் தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருப்பதால், சி.ஐ.டி., விசாரணை திரும்பப் பெறப்பட்டு உள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.