ADDED : மார் 29, 2024 06:39 AM

பானஸ்வாடி : ரவுடி கொலையில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு, கம்மனஹள்ளி ஆனந்தபுராவில் வசித்தவர் தினேஷ், 40. ரவுடியான இவர் பணத்திற்காக கொலை செய்யும், கூலிப்படையிலும் இருந்தார். இவர் மீது பானஸ்வாடி உள்ளிட்ட சில போலீஸ் நிலையங்களில், கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு கம்மனஹள்ளியில் உள்ள, ஓயோ ஹோட்டலுக்கு, தினேஷ், நண்பர்கள் ஏழு பேர் வந்தனர்.
ஹோட்டலில் வைத்தே தினேஷை, ஏழு பேரும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். பானஸ்வாடி போலீசார் விசாரித்தனர்.
கொலையாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தினேஷ் கொலையில், ரவுடிகள் 12 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 30 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.
தினேஷுக்கும், திலீப் சாகருக்கும் பல ஆண்டுகளாக, முன்விரோதம் இருந்தது. இதனால் திலீப் சாகரை தீர்த்துக்கட்ட, தினேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, திட்டம் தீட்டினார்.
இதுபற்றி அறிந்த திலீப் சாகர், தினேஷின் கூட்டாளிகளை தன் பக்கம் இழுத்து, தினேஷை போட்டு தள்ளியது, விசாரணையில் தெரிந்துள்ளது.

