ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல்: மும்பை போலீசார் அதிரடி
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல்: மும்பை போலீசார் அதிரடி
ADDED : மே 12, 2024 03:42 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எம்.டி மருந்து தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இந்த மருந்து தொழிற்சாலையில் போதைப்பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது. சட்ட விரோதமாக மருந்து தொழிற்சாலை இயங்கி வருவதாகவும், போதைப்பொருட்கள் கடத்தலை தடுத்து நிறுத்துமாறும் மும்பை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருந்து தொழிற்சாலையில் இன்று(மே 12) மும்பை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ரூ.107 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. மருந்து தொழிற்சாலையில் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.