கர்நாடக பப்ளிக் பள்ளிகளுக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு
கர்நாடக பப்ளிக் பள்ளிகளுக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு
ADDED : மார் 08, 2025 02:15 AM
ஒரே கூரையின் கீழ், எல்.கே.ஜி., முதல் பி.யு.சி., வரை தரமான கல்வி கிடைக்கும் நோக்கில், ஏசியன் டெவலப்மென்ட் வங்கி உதவியுடன், 2,500 கோடி ரூபாய் செலவில் புதிதாக 500 கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறக்கப்படும்
பள்ளி சிறார்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் நோக்கில், சிறார்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை, வாழைப்பழம் வழங்கப்படும் திட்டத்திற்காக 1,500 கோடி ரூபாய் செலவிடப்படும்
பள்ளி சிறார்களுக்கு பாலில் ராகி ஹெல்த் மிக்ஸ் கலந்து, ஐந்து நாட்களுக்கு வழங்கப்படும். 100 கோடி ரூபாயிலான திட்டத்தில், 25 சதவீதம் நிதியை அரசு வழங்கும்
அரசு தொடக்க, உயர்நிலை பள்ளிகளில் கவுரவ ஆசிரியர்கள்; அரசு பி.யு., கல்லுாரிகளின் கவுரவ பேராசிரியர்களுக்கு மாத ஊதியம் தலா 2,000 ரூபாய் அதிகரிக்கப்படும்
அரசு பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்களுக்கு மாத ஊதியம், தலா 1,000 ரூபாய் உயர்த்தப்படும்
'நிரந்தரா' திட்டத்தின் கீழ், Face Recogniyion தொழில் நுட்பத்தின் மூலம், மாணவர்களின் வருகை உறுதி செய்யப்படும்
மாணவர்களுக்கு தாய் மொழியுடன், ஆங்கில மொழி புலமையை அதிகரிக்க, மாநிலத்தின் 4,000 அரசு பள்ளிகளில், இரு மொழி பிரிவு துவக்கப்படும்.
உயர் நிலைப்பள்ளி, பி.யு., கல்லுாரிகளில், மாணவர்களுக்கு திறன் பயிற்சிக்காக, 'ஸ்கில் அட் ஸ்கூல் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 7,500 மாணவர்களுக்கு, தரம் உயர்ந்த 150 அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும்
அரசு பள்ளி, பி.யு., கல்லுாரிகளில் கூடுதல் அறைகள், கழிப்பறைகள் கட்ட, பழுது பார்க்கும் பணிகளுக்கு 725 கோடி ரூபாய்; தேவையான உபகரணங்கள் வழங்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
மதிய உணவு திட்டத்தின் கீழ், 16,347 பள்ளிகளில் சமையல் அறை நவீனமாக்கப்படும். புதிய பாத்திரங்கள், உபகரணங்கள் வாங்க 46 கோடி ரூபாய் செலவிடப்படும்
கல்யாண கர்நாடகா பகுதியில், 200 கோடி ரூபாய் செலவில் 50 பள்ளிகள், கர்நாடக பப்ளிக் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். காலியாக உள்ள 5,267 ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.