ADDED : மார் 08, 2025 02:13 AM
தரமான உயர் கல்வி அளிக்க, மாநிலத்தின் பி.யு., கல்லுாரிகளை பலப்படுத்த, கல்வி நிறுவனங்களில் 'சென்டர் ஆப் எக்சலென்ஸ்' மையங்கள் அமைக்கப்படும். உயர் கல்வி திறனை அதிகரிக்கும் நோக்கில், உலக வங்கி உதவியுடன் 2,500 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்
பெங்களூரு நகர பல்கலைக்கழகத்துக்கு, 'மன்மோகன் சிங் பெங்களூரு பல்கலைக்கழகம்' என, பெயர் சூட்டப்படும். இந்த பல்கலைக்கழகம் நாட்டில் முன்மாதிரி பல்கலைக்கழகமாக்கும் நோக்கில், அரசு கலை கல்லுாரி மற்றும் அரசு ஆர்.சி., கல்லுாரிகள் தரம் உயர்த்தப்படும்
நடப்பாண்டு 26 கோடி ரூபாய் செலவில், 26 மகளிர் கல்லுாரிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்
அரசு பி.யு., கல்லுாரிகள், இன்ஜினியரிங் கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள 2,600 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
அரசு இன்ஜினியரிங் கல்லுாரி, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு கல்லுாரிகளுக்கு 275 கோடி ரூபாய் செலவில், தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும்
புதிதாக துவங்கப்பட்ட பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு 10 கோடி ரூபாய் செலவில், உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள், புத்தகங்கள் வழங்கப்படும்
அரசு பட்டப்படிப்பு கல்லுாரிகளில் படிக்கும் மாணவியருக்கு, இங்கிலாந்தின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஓராண்டு முதுகலை பட்டப்படிப்பு படிக்க உதவி செய்யப்படும்
அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க, கல்வி வல்லுனர்கள், பயிற்சி பேராசிரியர்களாக நியமிக்கப்படுவர்
உயர் கல்வி நிறுவனங்களில், UUCMS தொழில்நுட்பத்தை செயல்படுத்த, 30 கோடி ரூபாய் வழங்கப்படும்
சிந்தாமணியில் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், 150 கோடி ரூபாய் செலவில் கல்லுாரி கட்டப்படும்
கல்வித்துறையின் பேராசிரியர்களின் கல்வி போதிக்கும் திறனை அதிகரிக்க, பயிற்சி அளிக்கப்படும்
அரசு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பை ஏற்படுத்த, சிறப்பு திறன் பயிற்சிகள் அளிக்கப்படும்
கே.கே.ஆர்.டி.பி., சார்பில் 23,000 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிக்காக 10 கோடி ரூபாய் வழங்கப்படும்
மைசூரு பல்கலைக்கழகத்தில், நஞ்சுண்டசாமி ஆராய்ச்சி மையம் துவக்கப்படும்.