ரூ. 31 லட்சம் ஆன்-லைன் மோசடி சீனாவுடன் தொடர்புள்ள 4 பேர் கைது
ரூ. 31 லட்சம் ஆன்-லைன் மோசடி சீனாவுடன் தொடர்புள்ள 4 பேர் கைது
ADDED : ஆக 04, 2024 10:49 PM
புதுடில்லி:ஆன்-லைன் வாயிலாக 31.55 லட்சம் ரூபாய் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டு, 7 மொபைல் போன்கள் மற்றும் ஒரு லேப் டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் மத்திய மண்டல ஹர்ஷவர்தன் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட நபர் ஜூலை 18ம் தேதி ஆன்-லைன் வாயிலாக போலீஸ் மாநகரப் போலீஸ் இணையதளத்தில் புகாரை பதிவு செய்தார். அதில், ஜூலை 13ம் வாங்கிய மொபைல் போன் சிம் கார்டு ஏற்கனவே பல குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதும், அதனால் லக்னோ ஆரம்பாக் போலீஸ் தன்னை தேடி வருவதாகவும் கூறியிருந்தார். மேலும், சிலர் தன்னை மிரட்டி 31.55 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டனர் என கூறியிருந்தார். இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணையைத் துவக்கினர். ஜூலை 26ம் தேதி தேவ்பதி,36 என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் ராபின் சோலங்கி,25 மற்றும் விஷ்ணு சோலங்கி ஆகிய இருவரும் ஜூலை 28ம் தேதியும், ஆகாஷ் குமார் ஜெயின்ம்31, ஜூலை 31ம் தேதியும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நான்கு பேருக்கும் சீனாவில் உள்ள மோசடிக் கும்பலுடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பணப் பரிமாற்றம் நடந்த வங்கிக் கணக்குகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளில் குறுகிய காலத்தில் பல கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. தேவ்பதி கணக்கில் தற்போது 1.25 கோடி உள்ளது. அந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் குமார் ஜெயின்தான் அனைத்து கணக்குகளையும் கையாளும் நபராக செயல்பட்டுள்ளார். மேலும், சீன நாட்டின் மோசடிக் கும்பலுடன் நேரடித் தொடர்பில் இருந்துள்ளார். நான்கு பேரிடம் இருந்தும் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் ஒரு லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.