ADDED : மார் 08, 2025 02:15 AM

பிரசவத்தின் போது உயிரிழப்பை தடுக்க, 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு; உயிரிழப்புகளை தடுக்க குழு உருவாக்கப்பட்டு, திட்டங்கள் வகுக்கப்படும். கடுமையான ரத்தப்போக்கை தடுப்பதற்கு புதிய தொழில் நுட்பம்
கர்ப்பிணியருக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்க திட்டம்; பின்தங்கிய மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு 'வாத்சல்யா உபகரணங்கள்' வழங்கல்
தாலுகா மருத்துவமனைகளில் உள்ள பணியிடங்களின் மறுசீரமைப்பு மூலம் எம்.சி.ஹெச்., நிபுணர்கள் நியமனம்
அதானி, ஹூன்குந்த், முதோல் ஆகிய பகுதிகளில் 50 படுக்கைகளுடன் கூடிய தாய், சேய் மருத்துவமனை கட்ட ஒப்புதல்.
மாவட்ட மருத்துவமனைகளில், மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு, அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து நல்வாழ்வு மையங்கள்
நரம்பியல் நோயாளிகளின் சிகிச்சைக்கு 20 கோடி ரூபாய்
பெங்களூரு வடக்கு தாலுகாவில் 200 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்க 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ஹனுார், அலனாவர், அன்னிகேரி, மாஸ்கி, சிரிவார், காபு, பாபலேஸ்வர், கோல்ஹார், செல்லுாரு, தெர்தல் ஆகிய தாலுகாக்களின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார மையங்களாக மேம்படுத்தப்படும். பொன்னம்பேட்டையில் புதிதாக நகர சுகாதார மையம் நிறுவப்படும்
மாலுார், மாகடி, குஷால்நகர், கொரடகெரே, ஜகலுார், சாவனுார், ராமதுர்கா, சவதத்தியில் உள்ள தாலுகா மருத்துவமனைகள்; தாவணகெரே மாவட்ட மருத்துவமனை; மங்களூரு வென்லாக் மருத்துவமனை ஆகியவை 650 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும்
புத்துாரில் புதிய மருத்துவ கல்லுாரி உருவாக்க, 100 படுக்கை கொண்ட தாலுகா மருத்துவமனை அந்தஸ்து உயர்த்தப்படும்
குடகின் விராஜ்பேட்டையில் 400 படுக்கைகள்; சித்ரதுர்காவின் மொலகால்மூருவில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்படும். மைசூரின் தகதுார் நகர சுகாதார மையம் 100 படுக்கைகள் கொண்டதாக மேம்படுத்தப்படும்
மோசமான நிலையில் உள்ள மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள் 183 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும்
கல்யாண கர்நாடகா விரிவான சுகாதார திட்டத்தின் கீழ் பீதர், கலபுரகி, யாத்கிர், ராய்ச்சூர், கொப்பால், பல்லாரி, விஜயநகர் ஆகிய மாவட்டங்களில் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்கு 873 கோடி ரூபாய் செலவில் பல திட்டங்கள் தீட்டப்படும்
பல அரசு துறைகளில், கவுரவ ஊதிய அடிப்படையில் பணிபுரியும் 3 லட்சம் ஊழியர்கள், அவர்களை சார்ந்தவர்களுக்கு சுவர்ண ஆரோக்யா சுரக் ஷா அறக்கட்டளை மூலம், 5 லட்சம் ரூபாய் வரையில் இலவச சிகிச்சை வழங்கப்படும்
கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை கண்டறிவதற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு
கல்யாண கர்நாடகாவில், சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 கோடி ரூபாயில் ஹெச்.பி.வி., தடுப்பூசி திட்டம்
கோலாரில் செயல்படுத்தப்பட்டு உள்ள கிருஹ ஆரோக்கிய திட்டம், 100 கோடி ரூபாய் செலவில் மாநிலம் முழுதும் விஸ்தரிக்கப்படும்
மலைப்பகுதிகளில் பரவும் சிக்கன்குனியா, குரங்கு காய்ச்சல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த 50 கோடி ரூபாயில் சிறப்பு திட்டம்
குழந்தைகளின் கேட்கும் திறனை கண்டறிந்து சிகிச்சை அளிக்க 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு
காசநோயால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெறும் சுகாதார மையங்களுக்கு 100 சிறப்பு கருவிகள்
இதுவரை 9,500 ரூபாய் கவுரவ ஊதியம் பெறும் ஆஷா பணியாளர்களுக்காக கூடுதலாக 1,000 ரூபாய் வழங்கப்படும்
ஹோட்டல் உணவுகளின் தரத்தை ஆய்வு செய்வதற்கு நடமாடும் பரிசோதனை மையம்; சோதனையில் பாதுகாப்பற்ற உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை
பொது சுகாதார மையங்களுக்கு தகுதியான மருந்துகள் வழங்குவதை கே.எஸ்.எம்.எஸ்.சி.எல்., உறுதி செய்ய புதிய மென்பொருள் அறிமுகம்
நாட்டில் முதன் முறையாக, பெண்களுக்கு ஏற்படும் தீக்காயங்களை தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் புதிய திட்டம்
ஊழியர்கள் வருகை பதிவேட்டை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்
அனைத்து தாலுகா மருத்துவமனைகளின் நிர்வாகமும் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணரின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வரப்படும்
சுகாதார துறையில் உள்ள காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.