ADDED : மார் 08, 2025 02:14 AM
* கிராம பகுதி சாலைகளை மேம்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு 5,200 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு பணிகள் நிறைவேற்றப்படும்.
* ஜல்ஜீவன் திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை 11,787 கோடி ரூபாயும்; மாநில அரசு 20,703 கோடி ரூபாயும் ஒதுக்கி உள்ளது. கடந்த ஆண்டில் 3,800 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்க வேண்டும். ஆனால் வெறும் 571 கோடி ரூபாய் தான் ஒதுக்கினர். திட்டத்தை விரைவாக செயல்படுத்தவும், மத்திய அரசு நிதி ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் மாநில அரசு 8,400 கோடி ரூபாய் முன்கூட்டியே விடுவித்தது. இந்த பட்ஜெட்டில் 6,050 கோடி ரூபாய் விடுவிக்கப்படும்.
* கல்யாண பாதை திட்டத்தின் கீழ், கல்யாண கர்நாடகா பகுதியில் உள்ள 38 சட்டசபை தொகுதிகளில் 1,000 கோடி ரூபாயில் நடந்து வந்த சாலை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
* அறிவியல், கலை, இலக்கியம் மற்றும் தொழில் வழிகாட்டுதலை மையமாக கொண்ட 'சிகூரு' திட்டத்தின் கீழ், கிராம பஞ்சாயத்து அளவில் அறிவுசார்ந்த மையங்கள் துவக்கப்படும்.
* பஞ்சதந்திரா சாப்ட்வேர் திட்டம் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து அளவிலும் விரிவுபடுத்தப்படும்.
* கிராம பஞ்சாயத்துகளை மூத்த அதிகாரிகள் தத்தெடுக்கும் வகையில் திட்டம் கொண்டு வரப்படும்.
* கிராமப்பகுதிகளில் சுய உதவி குழுக்களுடன் இணைந்து, மொத்தம் 5,000 ஏக்கரில் மசாலா, பழ பயிர்கள் வளர்க்கப்படும்.
* ரூரல் பகுதிகளில் 5,000 கி.மீ., சாலைகளை பசுமைப்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் நடப்படும்.
* விவசாய நிலங்களின் அருகில் சோதனை அடிப்படையில், 'விவசாய பாதை' அமைக்கப்படும்.