தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரூ.750 கோடியில் உறைவிட பள்ளி தொழிலாளர் குழந்தைகளுக்காக ரூ.750 கோடியில் உறைவிட பள்ளி
தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரூ.750 கோடியில் உறைவிட பள்ளி தொழிலாளர் குழந்தைகளுக்காக ரூ.750 கோடியில் உறைவிட பள்ளி
ADDED : மார் 08, 2025 02:13 AM
கட்டடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, தரமான கல்வி கிடைக்கும் வகையில் 6ம் வகுப்பு முதல் பி.யு., வரை, மாநிலத்தின் 31 மாவட்டங்களிலும் 750 கோடி ரூபாய் செலவில் உறைவிட பள்ளிகள் கட்டப்படும். இப்பள்ளிகளை பிற்படுத்தப்பட்டோர் நல துறை நிர்வகிக்கும்
தொழிலாளர் நல வாரியத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்த தொழிலாளர்கள், அவரை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு சலுகைகள் நீட்டிக்கப்படும்
வாரியத்தில் பெயர்களை பதிவு செய்து வைத்திருக்கும், தொழிலாளர்கள் இயற்கையான முறையில் இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண தொகை 75,000 ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாயாகவும்; வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் இறந்தால், குடும்பத்திற்கு வழங்கப்படும், நிவாரண தொகை 5 லட்சம் ரூபாயில் இருந்து, 8 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது
'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெறலாம். உச்சவரம்பை முடித்த பின், புற்றுநோய், இதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றால் அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்
இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளை பராமரிக்க, மருத்துவ உபகரணங்கள் வாங்க, அவசர பிரிவு அறையை புனரமைப்பு செய்ய 51 கோடி ரூபாய் ஒதுக்கீடு.