ADDED : செப் 07, 2024 07:20 PM
குருகிராம்:பங்குச் சந்தை முதலீட்டில் 77 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை குருகிராம் போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் பசில்காவை சேர்ந்தவர் ரிதவுர் ஜாவேத் ஜிஞ்சா. அதே ஊரைச் சேர்ந்த ஒருவரிடம், பங்குச் சந்தையில் மூதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாக 77 லட்சம் ரூபாய் மோசடி செய்தார். பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்படி வழக்குப் பதிவு செய்த குருகிராம் கிழக்கு போலீசார், ஜிஞ்சாவை நேற்று முன் தினம் கைது செய்தனர். மோசடி செய்த 77 லட்சம் ரூபாயில் 5 லட்சம் ரூபாயை தன் கூட்டாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியதை ஒப்புக் கொண்டார்.
சண்டிகர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், தாக்குதல் மற்றும் சட்டவிரோத ஆயுத விற்பனை என 8 வழக்குகள் ஜிஞ்சா மீது நிலுவயில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.