sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விதிகளை மீறிய வாகனங்களுக்கு ஒரே வாரத்தில் ரூ.9 கோடி அபராதம்

/

விதிகளை மீறிய வாகனங்களுக்கு ஒரே வாரத்தில் ரூ.9 கோடி அபராதம்

விதிகளை மீறிய வாகனங்களுக்கு ஒரே வாரத்தில் ரூ.9 கோடி அபராதம்

விதிகளை மீறிய வாகனங்களுக்கு ஒரே வாரத்தில் ரூ.9 கோடி அபராதம்


ADDED : ஆக 29, 2024 01:09 AM

Google News

ADDED : ஆக 29, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா, பீஹாரில் தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு, ஒரே வாரத்தில் 16,700 இ - சலான்கள் வாயிலாக, 9.49 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில், சுங்கச் சாவடிகளில் தானியங்கி முறையில் வாகனங்களை சோதனை செய்யும் முறை பீஹாரில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு உள்ள 13 சுங்கச் சாவடிகளில், கடந்த 7 - 15ம் தேதி வரை மின்னணு வாயிலாக வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது, வாகனத்தின் காப்பீடு ஆவணம், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் உள்ளிட்டவை எலக்ட்ரானிக் முறையில் சோதனை செய்யப்பட்டன.

மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களின் உரிமையாளர்களின் மொபைல் போன்களுக்கு, அபராதத்துக்கான இ - சலான் அனுப்பப்பட்டன.

இது குறித்து, பீஹார் மாநில ஏ.டி.ஜி.பி., சுதன்ஷூ குமார் கூறியதாவது:

போக்குவரத்து துறையின் உதவியுடன், 13 சுங்கச்சாவடிகளில் மின்னணு சோதனை வாயிலாக இ - சலான் வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி கடந்த 7 - 15 வரையிலான காலகட்டத்தில், 16,500 இ - சலான்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. பீஹாரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு 7,079 சலான்களும், பிற மாநில வாகனங்களுக்கு 9,676 சலான்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான மொத்த அபராதத் தொகை 9.49 கோடி ரூபாய்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us