ரூ.1 கோடி போதை பொருள் பொம்மைக்குள் மறைத்து கடத்தல்
ரூ.1 கோடி போதை பொருள் பொம்மைக்குள் மறைத்து கடத்தல்
ADDED : ஜூன் 02, 2024 01:45 AM

ஆமதாபாத் குஜராத்தில் குழந்தைகளுக்கான பொம்மைகள், சாப்பாட்டு பெட்டி, சாக்லேட்டுகளில் வைத்து கடத்தப்பட்ட 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பார்சல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் மற்றும் சுங்கத் துறையினர் இணைந்து பல்வேறு இடங்களில் சோதனையை தீவிரப்படுத்தினர்.
ஆமதாபாதில் உள்ள வெளிநாட்டு பார்சல்களை கையாளும் தபால் அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தினர். அதில், குழந்தைகளுக்கான பொம்மைகள், சாக்லேட்டுகள், சாப்பாட்டு டப்பாக்களில் வீரிய ரக கஞ்சா ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.
இவை கனடா, அமெரிக்கா மற்றும் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு, 1.15 கோடி ரூபாய் என கணித்துள்ளனர். கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் கடத்தலில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்த விசாரணை நடக்கிறது.