தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சபரிமலை நடை நாளை திறப்பு

சபரிமலை நடை நாளை திறப்பு

சபரிமலை நடை நாளை திறப்பு


ADDED : செப் 12, 2024 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2024 12:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சபரிமலை:திருவோணம் பண்டிகையும், புரட்டாசி மாத பூஜையும் சேர்ந்து வருவதால், சபரிமலை நடை இந்த மாதம் எட்டு நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

நாளை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து வேறு விசேஷ பூஜைகள் நடைபெறாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

செப்., 14 அதிகாலை 5:00-க்கு நடை திறந்ததும் தந்திரி பிரம்மதத்தன், அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்து நெய்யபிஷேகத்தை துவக்கி வைப்பார். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் திருவோண சிறப்பு பூஜைகளும் துவங்கும்.

இரவு 7:00 மணிக்கு பிரசித்தி பெற்ற படி பூஜை நடைபெறும். செப்., 22 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us