sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியர்களின் நிறம் குறித்து சாம் பிட்ரோடா... மீண்டும் சர்ச்சை!

/

இந்தியர்களின் நிறம் குறித்து சாம் பிட்ரோடா... மீண்டும் சர்ச்சை!

இந்தியர்களின் நிறம் குறித்து சாம் பிட்ரோடா... மீண்டும் சர்ச்சை!

இந்தியர்களின் நிறம் குறித்து சாம் பிட்ரோடா... மீண்டும் சர்ச்சை!


ADDED : மே 09, 2024 12:59 AM

Google News

ADDED : மே 09, 2024 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி ''இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களை போலவும், தெற்கில் இருப்பவர்கள் ஆப்ரிக்கர்களை போலவும் உள்ளனர்,'' என, காங்கிரஸ் வெளிநாட்டுப் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, காங்., வெளிநாட்டுப் பிரிவு தலைவர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார்.

காங்., - எம்.பி., ராகுலுக்கு நெருக்கமானவரான சாம் பிட்ரோடா, 82, அக்கட்சியின் வெளிநாட்டுப் பிரிவு தலைவராக இருந்தார். இவர் தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் இவர், 'லோக்சபா தேர்தலில் காங்., வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், வாரிசு வரி அமல்படுத்தப்படும்' என, தெரிவித்தார். இது, நம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், சாம் பிட்ரோடா கருத்துக்கு காங்கிரசை கடுமையாக விமர்சித்தனர்.

ஒற்றுமை


எனினும், 'சாம் பிட்ரோடா கருத்துக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, காங்., விளக்கம் அளித்தது. இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், இந்தியர்களின் நிறம் குறித்து கருத்து தெரிவித்து, மீண்டும் வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் சாம் பிட்ரோடா.

சமீபத்தில், 'தி ஸ்டேட்ஸ்மேன்' நாளிதழுக்கு, சாம் பிட்ரோடா அளித்த பேட்டி:

ஹிந்து தேசம் கோரி நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடவில்லை. மதச்சார்பற்ற நாடு கோரி அவர்கள் போராடினர். மதத்தின் அடிப்படையில் ஒரு நாட்டை உருவாக்க, பாக்., முடிவு செய்தது. ஆனால், அந்நாட்டுக்கு என்ன நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

உலகில் ஜனநாயகத்துக்கு சிறந்த உதாரணமாகவும், பன்முகத்தன்மை உடைய நாடாகவும் நம் நாடு விளங்குகிறது. பல்வேறு மொழிகள், கலாசாரம், பழக்க வழக்கங்கள் இருந்தாலும், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்கிறோம்.

நம் நாட்டில், கிழக்கில் வசிக்கும் மக்கள் சீனர்கள் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும், வடக்கில் வசிப்போர் வெள்ளையர்களை போலவும், தென் மாநிலங்களில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களை போலவும் இருப்பர்.

ஆனால், நிறம் முக்கிய மில்லை. நாம் அனைவரும் சகோதர - சகோதரிகள். அது தான் முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்து, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. வட கிழக்கு பிராந்தியத்தில், பா.ஜ., ஆளும் அசாம் மற்றும் மணிப்பூரின் முதல்வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் கூறுகையில், ''மத அடிப்படையில் இந்தியாவை பிளவுபடுத்த காங்., முயற்சிக்கிறது. மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த வன்முறைக்கு அக்கட்சியே காரணம்,'' என்றார்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், ''நான் வட கிழக்கைச் சேர்ந்தவனாக இருந்தாலும், ஓர் இந்தியன். நாம் வித்தியாசமாக தோன்றினாலும், நாம் அனைவரும் ஒன்று தான்,'' என்றார்.

இந்நிலையில், தெலுங்கானாவின் வாரங்கலில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில், சாம் பிட்ரோடா கருத்துக்கு பதிலடி கொடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:

காங்., இளவரசர் ராகுலின் மாமா சாம் பிட்ரோடா அமெரிக்காவில் வசிக்கிறார். எந்த சந்தேகம் இருந்தாலும் அவரிடம் தான் ராகுல் ஆலோசனை கேட்பார். தற்போது அவர், கருப்பாக இருக்கும் இந்தியர்களை ஆப்ரிக்கர்கள் என அழைத்து, நம் மக்களை அவமதித்துள்ளார்.

அவமதிப்பு


நம் ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்கிரசார் ஏன் அவமதிக்கின்றனர் என்பது, தற்போது எனக்கு புரிகிறது. அவர் கருப்பாக இருப்பதால், தேர்தலில் அவரை தோற்கடிக்க காங்., நிர்வாகிகள் நினைத்தனர்.

இன்று நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். என்னை என்ன சொன்னாலும் நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால், இந்தியர்களை யாராவது ஏதாவது சொன்னால், என்னால் அமைதியாக இருக்க முடியாது.

ராகுலின் மாமா சாம் பிட்ரோடா எல்லை மீறி பேசி உள்ளார். தோலின் நிறத்தைக் கூறி, என் மக்களை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.

இது குறித்து ராகுல் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? தென் மாநில மக்களை ஆப்ரிக்கர்கள் என காங்., அழைத்துள்ளது. அக்கட்சி உடனான கூட்டணியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் முறித்துக் கொள்வாரா?

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, 'பன்முகத்தன்மையை விளக்கும் நோக்கில், சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கள் ஏற்க முடியாதவை. இதற்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

'காங்., வெளிநாட்டுப் பிரிவு தலைவர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார். இதை, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்றுக்கொண்டார்' என, காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளார்.

எதுவும் தெரியவில்லை!

சாம் பிட்ரோடாவுக்கு நம் நாடு குறித்தும், பாரம்பரியம் குறித்தும் தெரியவில்லை. தன் பேச்சு வாயிலாக அவர் முற்றிலுமாக தோற்று விட்டார். சாம் பிட்ரோடா இவ்வாறு பேசுவதை பார்க்கும் போது, ராகுல் ஏன் பல நேரங்களில் முட்டாள்தனமாக பேசுகிறார் என்பது தற்போது புரிகிறது.

ரவிசங்கர் பிரசாத்

மூத்த தலைவர், பா.ஜ.,

நிர்மலா பதிலடி!

பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியதாவது:நான் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர். நான் இந்தியனாக தெரிகிறேன். என் குழுவில் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் இருக்கின்றனர்; அவர்களும் இந்தியர்களாக தெரிகின்றனர். ஆனால், ராகுல் வழிகாட்டியான சாம் பிட்ரோடாவின் பார்வைக்கு நாங்கள் அனைவரும், சீனர்களாகவும், ஆப்ரிக்கர்களாகவும், வெள்ளையர்களாகவும் தெரிகிறோம். காங்., மற்றும் இண்டியா கூட்டணியின் மனநிலை மற்றும் அணுகுமுறை தற்போது வெளிப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us