சந்தேஷ் காலி போராட்ட பெண்களுக்கு ரூ.2000 பணம்: புதிய வீடியோவால் சர்ச்சை
சந்தேஷ் காலி போராட்ட பெண்களுக்கு ரூ.2000 பணம்: புதிய வீடியோவால் சர்ச்சை
ADDED : மே 12, 2024 07:34 PM

கோல்கட்டா: சந்தேஷ்காலி சம்பவம் குறித்து போராட்டம் நடத்த வரும் பெண்களுக்கு ரூ.2000 வழங்கப்பட்டதாக புதிய வீடியோ வெளியானதை அடுத்து சர்ச்சையை எழுப்பி உள்ளது.
மே,வங்க மாநிலத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த சந்தேஷ்காலி பகுதியில் கடந்த பிப்., மாதத்தில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தாக திரிணமுல் கட்சியை சேர்ந்த ஷாஜகான்ஷேக் என்பவர் மீது பா.ஜ., குற்றம் சுமத்தியது.
இதனிடையே மே-11-ம்தேதி வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த சந்தேஷ்காலி மண்டல பா,ஜ., தலைவர் ஒருவர் கூறியதவாது ஷாஜகான்ஷேக்-ஐ கண்டித்து போராட்டம் நடத்த வரும் 70 பெண்களுக்கு தலா ரூ.2,000 தரப்பட்டுள்ளதாகவும். பெண்கள் இருக்கும் 50 சாவடிகளுக்கு எங்களுக்கு ரூ. 2.5 லட்சம் பணம் தேவைப்படும். இங்குள்ள பழங்குடியினர் மற்றும் ஓபிசி பிரிவு மக்களை திருப்திகரமாக வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும், பெண்களே முன்வரிசையில் போலீஸாரை எதிர்கொள்வார்கள்” என்று அந்த வீடியோவில் பா,ஜ,. தலைவர் தெரிவிப்பதாக வெளியாகி உள்ளது. ஆனால் இந்த வீடியோக்கள் போலியானது என பா.ஜ.,வினர் தெரிவித்து உள்ளனர்.
அதே நேரத்தில் டி.எம்சி கட்சியின் செய்தி தொடர்பாளர் ரிஜூ தத்தா கூறுகையில், சந்தேஷ்காலி குறித்த பாஜகவின் போலி கதையின் உண்மை மறைமுகமாக வெளிவருகிறது. கடந்த சில நாட்களாக சந்தேஷ்காலி பெண்களின் பல நோக்கமான வீடியோக்கள் வெளிவந்து டி.எம்.சி கட்சி சார்பில் பகிரப்பட்டு வருகின்றன.
முதல் வீடியோவில் எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியின் உத்தரவின் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டது. இரண்டாவது வீடியோவில் பாஜக தலைவர்களால் வெற்று தாளில் கையெழுத்திடச் செய்யப்பட்டதாகவும், காவல் நிலையத்திற்குச் செல்ல வற்புறுத்தியதாகவும் கூறி, பாலியல் பலாத்கார புகார்களை அளித்த பெண்களை குறித்தும் வெளியாகி உள்ளது.
இதனிடையே சந்தேஷ்காலியில் உள்ள சில பெண்களிடம் அப்பகுதியில் உள்ள டிஎம்சி தலைவர்களுக்கு எதிராக பலாத்கார புகார்களை அளிக்கச் சொல்லி, தனது அதிகாரப் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மாவுக்கு எதிராக, டிஎம்சி ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.