அவனை துாக்கில் போடுங்க; கோல்கட்டாவில் ஒலித்தது உரத்த குரல்!
அவனை துாக்கில் போடுங்க; கோல்கட்டாவில் ஒலித்தது உரத்த குரல்!
UPDATED : ஆக 20, 2024 09:46 AM
ADDED : ஆக 20, 2024 09:27 AM

கோல்கட்டா: 'கோல்கட்டாவில் ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள குற்றவாளி சஞ்சய் ராயை தூக்கில் போடுங்கள்' என அவரது மாமியார் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
கருச்சிதைவு
இந்நிலையில், சஞ்சய் ராயின் மாமியார் கூறியதாவது: திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. எனது மகளுக்கு சஞ்சய் ராய் உடன் இரண்டாவது திருமணம். திருமணம் முடிந்த 6 மாதங்களிலிருந்து என் மகளைக் கொடுமைப்படுத்தினான். 3 மாத கர்ப்பமாக இருந்த என் மகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இப்போது இந்த கொடூர காரியத்தையும் செய்திருக்கிறான். அவனை தூக்கில் போடுங்கள். அப்போது தான் என் மனம் ஆறும்.
உடல்நிலை
அவனை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் மகள் தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாள். அவளது மருத்துவ செலவுகள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டேன். குற்றத்தைப் பற்றி நான் பேசமாட்டேன். அதை சஞ்சய் ராய் மட்டும் தனியாக செய்திருக்க மாட்டான். அவன் சிலரின் தொடர்பை பயன்படுத்தி செய்திருப்பான். இவ்வாறு அவர் கூறினார்.

