ADDED : ஏப் 16, 2024 01:18 AM
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
நம் நாடு, ஓர் அழகான பூச்செண்டு போன்றது. இங்குள்ள ஒவ்வொருவரும் அதிலுள்ள மலர்கள். அவர்கள் அனைவரும் மதிக்கப்பட வேண்டும்.
அப்போது தான், அந்த முழு பூங்கொத்தின் அழகும் மேம்படும். இந்தியாவுக்கு ஒரு தலைவர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கருத்து, இங்குள்ள ஒவ்வொரு இளம் இந்தியரையும் அவமதிப்பதாகும்.
நாட்டு மக்கள் சொல்வதை கேட்கவும், அவர்களின் நம்பிக்கைகள், மொழி, மதம், கலாசாரம் ஆகியவற்றை நேசிக்கவும், மதிக்கவும் காங்கிரஸ் விரும்புகிறது.
ஆனால், மத்தியில் இருந்து ஏதாவது ஒரு கருத்தை மக்களிடம் திணிக்க பா.ஜ., விரும்புகிறது. நம் நாட்டை, இங்குள்ள மக்கள் அனைவரும் ஆள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

