தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இரண்டாம் முறை தோல்வி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம்

இரண்டாம் முறை தோல்வி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம்

இரண்டாம் முறை தோல்வி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம்


ADDED : ஜூலை 19, 2024 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2024 01:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திமர்பூர்,:ஒன்பதாம் வகுப்பில் இரண்டு முறை தோல்வியடைந்த மாணவர்களை 2024 - 25ம் ஆண்டுக்கான கல்வி அமர்வுக்கு என்.ஐ.ஓ.எஸ்., எனும் தேசிய திறந்தவெளிப் பள்ளிக்கல்வி நிறுவனத்தில் சேர்க்கும்படி, அரசுப் பள்ளிகளுக்கு டி.ஓ.இ., கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்வி இயக்குனரகத்தின் கணினிப்பிரிவு அளித்த தரவுகளின்படி, கடந்த கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பை மீண்டும் படித்த மாணவர்களில் 17,308 பேர் இரண்டாவது முறையாக தோல்வியடைந்தனர்.

இவர்களில் 6,200 மாணவர்கள் மட்டுமே, தற்போது கல்வி இயக்குனரகத்தின் வழிகாட்டுதலின்படி, என்.ஐ.ஓ.எஸ்., இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த மாணவர்கள் கல்வியை கைவிடும் அபாயம் நீங்கியுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர் தோல்விகளால் துவண்டுவிடும் மாணவர்கள், கல்வியை கைவிட்டும் அபாயம் இருப்பதை கல்வி இயக்குனரகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஒன்பதாம் வகுப்பில் இரண்டாவது முறையாக தோல்வி அடைந்த மற்ற மாணவர்களையும் தொடர்பு கொண்டு, அவர்களின் கல்வியை தொடரத் தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us