ADDED : ஜூன் 10, 2024 05:11 AM
ஆடாத ஆட்டம் எல்லாம்!
சட்டசபை தேர்தல்ல சிக்கபல்லாப்பூர்ல ஜெயிச்ச, கை கட்சி எம்.எல்.ஏ.,க்கு, வாய் சவடால் கொஞ்சம் அதிகம் தான். தாமரை கட்சியில போட்டியிட்ட, முன்னாள் அமைச்சர தோற்கடிப்பேன் சொன்னாரு. ஆனா கை கட்சிகாரரு நினைச்சது நடக்கல. தேர்தல் முடிவுகள் வெளியானதுல இருந்து, எம்.எல்.ஏ., சைலன்ட் மோடுக்கு போயிட்டாரு. கடந்த அஞ்சு நாளா ஆளயே காணோம். முதல் முறை எம்.எல்.ஏ., ஆகிட்டு, ஓவரா ஆட்டம் போட்டா இது தான் நிலைம, இனியாவது இருக்குற இடம் தெரியாம இருக்கணும்னு, எம்.எல்.ஏ.,வ எதிர்கோஷ்டி கிண்டல் பண்ணிட்டு வர்றாங்க.
சபதம் நிறைவேறியது!
வெண்ணெய் மாவட்டத்துல இருந்து, நான்கு முறை தாமரை கட்சி எம்.பி.,யா இருந்தவருக்கு, இம்முறை சீட் கொடுக்க, வெண்ணெய் மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. எம்.பி., மறுபடியும் சீட் கொடுத்தா, அவர தோற்கடிப்போம்னு சபதம் போட்டாங்க. இதனால எம்.பி.,யோட மனைவிக்கு சீட் கிடைச்சுது. எதிர்ப்பு தெரிவிஞ்சவங்களுக்கு, எம்.பி., மனைவியை ஜெயிக்க வைக்குற, பொறுப்ப கொடுத்து மேலிடம். ஆனா தேர்தல்ல எம்.பி., மனைவி தோத்து போயிட்டாங்க. எம்.பி., இருந்தா என்ன, மனைவியா இருந்தா என்ன... எடுத்த சபதம் முடித்தோம்னு, குஷியில இருக்காங்க எதிர்பார்ப்பாளர்கள்.
இளம் தலைவர் 'யு - டர்ன்'
முதல் கோணல் முற்றிலும் கோணல்னு சொல்வாங்க. அது உண்மை தான் போல. புல்லுக்கட்டு கட்சியோட தேசிய தலைவர் தொட்டகவுடரு பேரனான சினிமாகாரரு நிகிலு, போட்டியிட்ட இரண்டு தேர்தல்லயும் தோத்து போனாரு. இதனால் 'அப்செட்' ஆனவரு, இனிமே அரசியல் பக்கமே வர மாட்டேன். சினிமா பக்கம் போறேன்னு சொல்லி இருந்தாரு. ஆனா இப்போ சினிமாவுக்கு முழுக்கு போட்டுட்டு, முழு நேர அரசியல்வாதி ஆக போறன்னு சொல்லி இருக்காரு. என்ன அண்ணே இப்படி மாத்தி பேசுறீங்கன்னு, கட்சிக்காரங்க கேட்டா, அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பான்னு கூலாக சொல்றாராம்.
