* கடவுள் கொடுத்த பரிசு!
துணை முதல்வர் சிவாவோட தம்பி சுரேஷு, பெங்களூரு ரூரல்ல இருந்து தொடர்ந்து, மூணு முறை எம்.பி., ஆனவரு. என்னை யாருமே தோற்கடிக்க முடியாதுன்னு இறுமாப்புல இருந்தாரு. ஆனா தொட்டகவுடர் மருமகன் கிட்ட தோத்து போயிருக்காரு. தோல்விய சுரேஷால ஜீரணிக்க முடியலயாம். ஆதரவாளர்கள்கிட்ட புலம்பிட்டு வர்றாராம். கட்சி தொண்டர்கள் கூட்டத்துல பேசும் போது, நான் என்ன தப்பு பண்ணினேன். மக்கள் என்ன தோற்கடிச்சிட்டாங்கன்னு கண்ணீர்விட ஆரம்பிச்சி இருக்காராம். தொட்டகவுடரு குடும்பம் கண்ணீர்விடும் போது, கிண்டல் பண்ணுனதற்கு கடவுள் கொடுத்த பரிசுன்னு, புல்லுக்கட்டுகாரங்க சுரேஷ கிண்டல் பண்ணுறாங்களாம்.
==========
* சினிமாக்காரருக்கு பதவி?
புல்லுக்கட்டு கட்சி மாநில தலைவரா இருந்த குமரண்ணரு, இப்போ மத்திய அமைச்சர் ஆயிட்டாரு. ஒரே நேரத்துல அமைச்சரு, மாநில தலைவர் பதவிய கவனிக்க முடியாதுன்னு நினைக்குறாரு. இதனால தலைவரு பதவிய, வேறு யாருக்காவது தரலாம்னு நினைக்குறாராம். கட்சியில ஒரு கோஷ்டி, குமரண்ணர் தவப்புதல்வனான சினிமாகாரரு நிகிலுக்கு கொடுக்கலாம்னு, சொல்ல ஆரம்பிச்சி இருக்காங்க. ஆனா இன்னொரு கோஷ்டிக்கு, நிகிலுக்கு தலைவர் பதவிய கொடுக்க விருப்பம் இல்லையாம். வேறு யாருக்காவது தலைவர் பதவியை கொடுத்து, கட்சிய வளர்க்கலாம்னு சொல்றாங்க. யாரு தலைவர் ஆக போறாங்கன்னு, கூடிய சீக்கிரத்துல தெரியும்.
==========
* கை நழுவிய பதவி!
லோக்சபா தேர்தல்ல பெங்களூரு ரூரல் தொகுதியில, தாமரை கட்சி வேட்பாளரா போட்டியிட்ட டாக்டர் வரலாற்று வெற்றி பெற்றாரு. தேர்தலுக்கு முன்பே, டாக்டரு ஜெயிச்சார்னா, மத்திய சுகாதார அமைச்சரு ஆவாருன்னு, தொகுதி மக்கள் கருத்து தெரிவிச்சி இருந்தாங்க. ஆனா டாக்டருக்கு அமைச்சர் பதவி கிடைக்கல. அவருக்கு அமைச்சர் பதவி வாங்கி தர, குமரண்ணரும் எவ்வளவோ முயற்சி செய்தாரு. அவரது முயற்சி கைகூடல. இதனால தொகுதி மக்களும், டாக்டரோட ஆதரவாளர்களும் ஏமாற்றம் அடைஞ்சி இருக்காங்க. வரும் நாட்களில் டாக்டருக்கு கண்டிப்பாக, அமைச்சர் பதவி தரணும்னு கேட்க ஆரம்பிச்சி இருக்காங்க.
***