ஏழைகளின் நாயகன் எங்கே?
வெண்ணெய் மாவட்டத்துல சென்னகிரி எம்.எல்.ஏ.,வா இருக்குறவரு கை கட்சிக்காரரு. எப்ப பார்த்தாலும் தன்னை ஏழைகளின் நாயகன், விவசாயிகளின் பாதுகாவலன்னு சொல்லிட்டு இருப்பாரு. ஆனா அவரோட தொகுதியில, அசுத்த குடிநீர குடிச்சு மக்கள் பாதிச்சிட்டுவர்றாங்க. ஒரு பெண் கூட இறந்துபோயிட்டாங்க.
ஆனா ஏழைகளின் நாயகன் இத பத்தி வாய திறக்கல. எங்கே போனாரு, என்ன ஆனார்னு தெரியல. இதனால அவரு மேல தொகுதி மக்கள் கோபத்துல இருக்காங்க. பேச்சு மட்டும்பெருசா இருக்கு; செயல்ல ஒண்ணும்இல்லன்னு, எதிர்க்கட்சிக்காரங்க கிண்டல்அடிக்குறாங்க.
எதிர்க்கட்சி தலைக்கு பீதி
தாமரை கட்சி கூட கூட்டணி வைச்சு ஜெயிச்சு, மத்திய அமைச்சரு ஆனதுல இருந்து, குமரண்ணர் மவுசு கூடி போச்சு. தாமரை மேலிடம் கூட குமரண்ணர துாக்கி வச்சு பேசுறாங்களாம்.
இதனால மாநில எதிர்க்கட்சித் தலைவருக்கு பீதி ஏற்பட்டு இருக்கு. அடுத்த சட்டசபை தேர்தல்ல, தாமரை, புல்லுக்கட்டு கூட்டணி ஜெயிச்சா முதல்வர் ஆகலாம்னு, எதிர்க்கட்சித் தலைக்கு ஒரு ஆசை இருக்கு.
ஆனா, தன்னோட ஜாதிய சேர்ந்த குமரண்ணர், தன்னை விட ஒருபடி முன்னாடி போய் இருக்குறத, எதிர்க்கட்சித் தலையால தாங்கிக்க முடியலன்னும் ஒரு தகவல் பரவிட்டு இருக்கு.
காணாமல் போன துடைப்பம்
கர்நாடகாவுல தாமரை கட்சி ஆட்சியில இருந்த அப்போ, ரோடு சரியில்ல... அது சரியில்ல... இது சரியல்லன்னு துடைப்ப கட்சிக்காரங்க, தினமும் போராட்டம் நடத்துனாங்க.
ஆனா கைக்கட்சி ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம், போராட்டம் என்ற வார்த்தைய மறந்துடாங்க போல. அரசுக்கு எதிரா ஒரு பிரச்னைய கூட முன்னாடி வைச்சு போராடல.
'இண்டி' கூட்டணியில துடைப்ப கட்சியும் இருக்குற வாஸ்தவம் தான். அதுக்காக தப்ப கண்டிக்காம இருக்குறது சரியில்ல.
உண்மைய சொல்லணும்னா, கர்நாடகாவுல துடைப்பம் கட்சி காணாம போயிடுச்சு.