ADDED : ஜூலை 05, 2024 06:20 AM

தங்கவயல்: வேதியியல் கலவை சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள், தங்கவயலில் நேற்றும் பறிமுதல் செய்யப்பட்டன.
உணவில் செயற்கை நிறமூட்டி எனும் வேதி யியல் கலவை சேர்க்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் தடை விதித்தது. உணவில் செயற்கை நிறமூட்டிகள் கலப்பதால், புற்று நோய் ஏற்படும்; உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதை தடுக்கும் வகையில், தங்கவயல் நகராட்சி ஆணையர் பவன் குமார் தலைமையில் ஹோட்டல்கள், பேக்கரி, பானிபூரி கடைகள், ஸ்வீட் ஸ்டால்கள், ஐஸ்க்ரீம் கடைகள், சிக்கன் கபாப் கடைகளில் அதிகாரிகள், நேற்றும் இரண்டாவது நாளாக அதிரடி சோதனை நடத்தினர்.
உணவு பொருட்களில் வேதியியல் கலவை சேர்க்கப்பட்ட இனிப்பு பலகாரங்கள், பேக்கரி பொருட்கள், சிக்கன், மீன் கபாப்கள் ஆகியவை நேற்றும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒன்பது கடைகளுக்கு சேர்த்து, மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
� இனிப்பு தயாரிப்பு கடையில் நகராட்சி ஆணையர் பவன் குமார் ஆய்வு செய்து, உரிமையாளரிடம் விளக்கம் கேட்டார். � பறிமுதல் செய்யப்பட்ட செயற்கை நிறமூட்டி பாட்டில்கள். � பறிமுதல் செய்யப்பட்ட இனிப்பு வகைகள். இடம்: ராபர்ட்சன்பேட்டை, தங்கவயல்.