செந்தில் பாலாஜி ஜாமின் மனு: ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி ஜாமின் மனு: ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
UPDATED : மே 16, 2024 12:30 PM
ADDED : மே 16, 2024 12:19 PM

புதுடில்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை ஜூலை 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரியும், வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். இதனை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதனையடுத்து , மனுவை வரும் ஜூலை 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
சமீபத்தில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. அதேபோல், செந்தில் பாலாஜிக்கும் இன்று ஜாமின் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.