ADDED : மே 11, 2024 09:30 PM
சிங்கசந்திரா: தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரி செய்ய வந்த வீட்டின் பெண் மென்பொறியாளரை கட்டிப்பிடித்த தமிழக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, சிங்கசந்திராவில் வாடகை வீட்டில், 30 வயது பெண் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றுகிறார். கடந்த மே 4ம் தேதி இவரது வீட்டில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டது.
மறுநாள் 5ம் தேதி, இந்த இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டதால், முதல் நாள் வந்து சர்வீஸ் செய்த வாலிபருக்கு போன் செய்து விஷயத்தை கூறினார்.
அவரும் அன்று மாலை வீட்டுக்கு வந்தவர், இயந்திரத்தை சரிசெய்தார். அப்போது சமையல் அறையில் இருந்த பெண்ணை, பின்புறமாக வந்து கட்டிப் பிடித்தார்.
அதிர்ச்சியடைந்த அப்பெண், அவரை தள்ளிவிட்டு, சமையல் அறையை பூட்டினார். பின் தனது நண்பர்களுக்கு போன் செய்து விஷயத்தை கூறினார்.
அங்கு வந்த அவரது தோழி உட்பட இருவரும் கதவை திறந்தபோது, அந்நபர் அவர்களை தள்ளிவிட்டுத் தப்பிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வர்த்துார் போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த மகேந்திரன், 25, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண், தனியாக இருப்பதை கவனித்த மகேந்திரன், இச்செயலில் ஈடுபட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.