ADDED : பிப் 22, 2025 01:03 AM

தேசியவாத காங்., சரத் சந்திர பவார் தலைவரான சரத் பவார் எங்கள் எதிரி அல்ல. அவர் எங்கள் வழிகாட்டி. மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, மஹாராஷ்டிராவுக்காக நிறைய பணிகளை அவர் செய்துள்ளார். அவருக்கும், எங்களுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
சஞ்சய் ராவத்
ராஜ்யசபா எம்.பி., - உத்தவ் சிவசேனா
நிறைய செய்ய உள்ளோம்!
டில்லியை 15 ஆண்டுகளாக ஆண்ட காங்கிரசும், 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆம் ஆத்மியும், மக்களுக்காக எதையுமே செய்யவில்லை. பா.ஜ., அரசு பதவியேற்ற முதல் நாளே, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம். இன்னும் நிறைய செய்ய உள்ளோம்.
ரேகா குப்தா
டில்லி முதல்வர், பா.ஜ.,
எண்ணங்கள் பலிக்காது!
நம் நாட்டை பலவீனப்படுத்த, வெளிநாட்டு சக்திகளுடன் காங்., - எம்.பி., ராகுல் கூட்டு சேர்ந்து உள்ளார். அவர் ஒரு துரோகி. நம் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையை கெடுப்பதிலேயே குறியாக இருக்கிறார். பா.ஜ., இருக்கும் வரை அவரது எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது.
கவுரவ் பாட்டியா
தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

