ADDED : ஜூலை 13, 2024 08:28 PM
புதுடில்லி:வடகிழக்கு டில்லியில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிய இருவரை போலீசார் தேடுகின்றனர்.
வடகிழக்கு டில்லி ஜனதா மஸ்தூர் காலனியில் வசிப்பவர் ஷகிலா,50. நேற்று அதிகாலை 2:00 மணிக்கு அவர் வீட்டுக்குள் நுழைந்த இருவர், அயந்து தூங்கிக் கொண்டிருந்த ஷகிலாவை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.
சத்தம் கேட்டு எழுந்த அவரது மகன் முஹமது இஷ்திகர், போலீசுக்கும் ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் ஷகிலாவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கூரியர் நிறுவனத்தில் வேலை செய்த ஷகிலாவின் மகன் முஹமது இஷ்திகர், ஐந்து மாதங்களாக வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார்.