எஸ்.ஐ., தேர்வு ஒத்திவைப்பு? அமைச்சர் பரமேஸ்வர் பதில்!
எஸ்.ஐ., தேர்வு ஒத்திவைப்பு? அமைச்சர் பரமேஸ்வர் பதில்!
ADDED : ஆக 31, 2024 05:08 AM

பெங்களூரு: அடுத்த மாதம் 22 ம் தேதி யு.பி.எஸ்.சி., தேர்வு நடப்பதால், எஸ்.ஐ., தேர்வு ஒத்திவைக்கப்படுமா என்பதற்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பதில் அளித்து உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் காலியாக உள்ள எஸ்.ஐ., பணியிடங்களுக்கு, அடுத்த மாதம் 22ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று, நாங்கள் முதலில் அறிவித்து விட்டோம். ஆனால் அதே தேதியில் யு.பி.எஸ்.சி., தேர்வும் நடக்க உள்ளது. இதனால் தேர்வர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும் என்று, எனது துறை அதிகாரிகள், எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
எஸ்.ஐ., தேர்வை ஒத்திவைப்பது குறித்து ஆலோசனை நடத்துவோம். ஒரு தேர்வுக்காக இன்னொரு தேர்வை தள்ளிவைப்பது எப்போதும் சரியானது இல்லை. கடந்த முறை, நான் உள்துறை அமைச்சராக இருந்த போது, போலீஸ் துறையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் இம்முறை, காலி பணியிடங்களை நிரப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.