சிவசேனா பிரமுகரை வாளால் வெட்டி தாக்கிய சீக்கியர் கைது
சிவசேனா பிரமுகரை வாளால் வெட்டி தாக்கிய சீக்கியர் கைது
UPDATED : ஜூலை 06, 2024 03:22 AM
ADDED : ஜூலை 06, 2024 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்: பஞ்சாப்பில் பைக்கில் சென்ற சிவசேனா பிரமுகரை வழிமறித்து வாளால் நிஹாங்க் சீக்கியர் வெட்டிய சம்பம் நடந்தது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவி்ல் இரு சக்கரவாகனத்தில் சென்றிருந்த நபரை நிஹாங்க் சீக்கியர் வழிமறித்து அவரிடம் வாக்குவாதம் செய்தார். பின் கையில் வைத்திருந்த வாளால் அவரை சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி.யில் பதிவாகியது.
போலீசார் விசாரணை நடத்தியதில் வாளால் வெட்டியதில் காயமடைந்த நபர் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சந்தீப் தபார் என்பதும், சீக்கிய மதம் பற்றி அவதூறாக பேசியதால் தாக்கியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சீக்கியரை கைது செய்தனர்.