டில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி சிசோடியா மனு
டில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி சிசோடியா மனு
ADDED : மே 03, 2024 02:00 AM
புதுடில்லி,:மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்குகளில் ஜாமின் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தை முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.,யும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன. இந்த இரு வழக்குகளிலும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி, விசாரணை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு, ஏப்ரல் 30ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் மேல்முறையீட்டு ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவரது மனுவை அவசரமாக விசாரிக்க தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிஎஸ் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புக்கொண்டதை அடுத்து, இன்று விசாரணைக்கு வருகிறது.