'முதல்வர் பதவியில் இருந்து சித்துவை இறக்க முடியாது'
'முதல்வர் பதவியில் இருந்து சித்துவை இறக்க முடியாது'
ADDED : ஆக 03, 2024 11:24 PM

கொப்பால்: ''எதிர்க்கட்சிகள் பாதயாத்திரை நடத்தினாலும், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை இறக்க முடியாது,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகவேந்திர ஹிட்னால் கூறி உள்ளார்.
கொப்பால் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகவேந்திர ஹிட்னால் நேற்று அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா அரசியலில் அனுபவம் உடைய பலமான தலைவர். பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவாக உள்ளார். சிறப்பான மக்கள் நிர்வாகமும் கொடுக்கிறார். இதை பா.ஜ., - ம.ஜ.த.,வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
'மூடா' முறைகேட்டில் முதல்வருக்கு தொடர்பு இல்லை. அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த, பாதயாத்திரை நடத்துகின்றனர்.
எத்தனை பாதயாத்திரை நடத்தினாலும், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை யாராலும் இறக்க முடியாது. ஐந்து ஆண்டுகளும் அவரே முதல்வராக இருப்பார். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்களால், மாநில மக்கள் சந்தோஷமாக உள்ளனர். இதை பா.ஜ.,வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அக்கட்சியின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அவர்களின் அரசியல் நாடகம் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.