பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு அதிக தொகுதிகள் இ.வி.எம்., மீது சிவகுமார் சந்தேகம்
பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு அதிக தொகுதிகள் இ.வி.எம்., மீது சிவகுமார் சந்தேகம்
ADDED : ஜூன் 19, 2024 05:11 AM
பெங்களூரு : 'கர்நாடகாவில், லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களே காரணம்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ஜ., - 17, ம.ஜ.த., - 2; காங்கிரஸ் - 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில், காங்கிரஸ் எட்டு தொகுதிகளில் கூடுதல் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
ஓட்டுச்சீட்டு முறை தேர்தல் நடந்தபோது, மத்திய பிரதேசத்தில் மூன்றில், இரண்டு பங்கு ஓட்டுகளை காங்கிரஸ் பெற்றது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர தேர்தல் முறையில், மிகவும் குறைவான ஓட்டுகளே வந்துள்ளன. இயந்திரங்களால் தான் அந்த சூழ்நிலை மாறி உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர தேர்தல் முறை மாற வேண்டும். மீண்டும் ஓட்டுச்சீட்டு முறை வர வேண்டும். இது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்.
கர்நாடகாவில், லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களே காரணம்.
இவ்வாறு அவர்கூறினார்.

