ADDED : ஏப் 04, 2024 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொப்பால்: முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா, காங்கிரசில் இருந்து விலகி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில், இன்று பா.ஜ.,வில் இணைகிறார்.
கொப்பால் லோக்சபா தொகுதியில், 2009ல் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட சிவராமேகவுடா வெற்றி பெற்று எம்.பி.,யானார். 2014ல் பா.ஜ., சீட் நழுவியதால், அதிருப்தி அடைந்து கட்சியை விட்டு விலகி காங்கிரசுக்கு தாவினார்.
தொடர்ந்து, 10 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த இவரது பார்வை, தற்போது பா.ஜ., மீது பதிந்துள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில், இன்று பா.ஜ.,வில் இணைகிறார்.

