சிவராம் ஹெப்பாரின் ஆதரவாளர்கள் பா.ஜ., தலைமைக்கு பகிரங்க சவால்
சிவராம் ஹெப்பாரின் ஆதரவாளர்கள் பா.ஜ., தலைமைக்கு பகிரங்க சவால்
ADDED : ஜூன் 30, 2024 11:56 PM

உத்தரகன்னடா : கட்சிக்கு எதிராக செயல்படும், எல்லாபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பாரை, கட்சியில் இருந்து நீக்கும்படி பா.ஜ.,வினர் வலியுறுத்துகின்றனர். இவரை கட்சியில் இருந்து நீக்குங்கள் பார்க்கலாம் என, ஹெப்பாரின் ஆதரவாளர்கள் சவால் விடுகின்றனர்.
கடந்த 2019ல், காங்கிரசில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர் சிவராம் ஹெப்பார். பா.ஜ., அரசில் அமைச்சராகவும் இருந்தார். 2023 சட்டசபை தேர்தலில், உத்தரகன்னடாவின், எல்லாபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சட்டசபை தேர்தலில் கட்சி தோற்றதால், கட்சியில் அவருக்கு நாட்டம் குறைந்தது.
காங்கிரஸ் மீது பார்வையை திருப்பினார். ராஜ்யசபா தேர்தலிலும் அந்த கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட்டார். லோக்சபா தேர்தலுக்கு முன்பே, இவர் கட்சி தாவுவார் என, கருதப்பட்டது.
ஆனால் பா.ஜ.,வில் இருந்து கொண்டே, காங்கிரசுக்கு ஆதரவளித்தார். உத்தரகன்னடா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி வெற்றி பெற்றார்.
லோக்சபா தேர்தல் முடிவு வெளியாகும் வரை, உத்தரகன்னடா தொகுதியில் நீறுபூத்த நெருப்பாக இருந்த உட்கட்சி பூசல், இப்போது வெடித்து சிதறியுள்ளது.
கட்சிக்கு எதிராக செயல்பட்ட சிவராம் ஹெப்பாரை, கட்சியில் இருந்து நீக்கும்படி பா.ஜ., தொண்டர்கள், நெருக்கடி கொடுக்கின்றனர். ஆனால் இவரை கட்சியில் இருந்து நீக்குங்கள் பார்க்கலாம் என, இவரது ஆதரவாளர்கள் சவால்விடுகின்றனர்.
....புல் அவுட்....
கட்சி சின்னத்தின் கீழ் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர் கட்சிக்காக பணியாற்றாமல் இருப்பது, ஜனநாயகத்துக்கு மதிப்பை தராது. இத்தகைய சூழ்நிலையில, சிவராம் ஹெப்பார் ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலை எதிர்கொள்வது நல்லது.
- விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி எம்.பி.,
========
சிவராம் ஹெப்பார், எல்லாபுரா தொகுதியின் சக்தியாகும். அவர் காங்கிரசுக்கு ஆதரவாக வேலை செய்யவில்லை. ஆனால் இவரை கட்சியில் இருந்து, வெளியேற்றும் நோக்கில் ராஜினாமா கேட்கின்றனர்.
- தியாமன்னா தொட்டமணி, சிவராம் ஹெப்பாரின் ஆதரவாளர்