முகத்தில் 21 முறை கத்திக்குத்து: டில்லியில் ஜிம் உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்
முகத்தில் 21 முறை கத்திக்குத்து: டில்லியில் ஜிம் உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்
UPDATED : ஜூலை 12, 2024 11:17 AM
ADDED : ஜூலை 11, 2024 10:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் 28 வயதான ஜிம் உரிமையாளர் சுமித் சவுத்ரி என்பவர் மர்மநபர்களால் 21 முறை முகத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு டில்லியின் பஜன்புரா பகுதியில் சுமித் சவுத்ரி என்பவர் மர்மநபர்களால் 21 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இவர் டில்லியில் ஜிம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மனைவியும், மூன்று வயது மகனும் உள்ளனர்.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் ஜாய் கூறியதாவது: 'சவுத்ரி தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது, நான்கு பேருடன் சண்டையிட்டுள்ளார். அந்த நபர்கள் அவரை கத்தியால் முகத்தில் 21 முறையும் மற்ற பகுதிகளில் பலமுறையும் குத்தியுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்