பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் பாதிப்பு: பிரியங்கா குற்றச்சாட்டு
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் பாதிப்பு: பிரியங்கா குற்றச்சாட்டு
ADDED : மே 12, 2024 04:34 PM

லக்னோ: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் போட்டியிடுகிறார். சகோதரர் ராகுலுக்கு ஆதரவாக ரேபரேலி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: நாட்டின் செல்வம் 5 தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி செயல்படுத்தினார். இதனால் சிறு தொழில்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டனர்.
நன்கொடை
ஊழலுக்கான திட்டத்தை பா.ஜ., வகுத்துள்ளது. பணக்காரர்களிடம் நன்கொடை பெற்று, கட்சியை பலப்படுத்தி, மக்களிடையே வெறுப்பை பரப்பும் வேலையை பா.ஜ., வினர் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக வாரணாசி எம்.பி.யாக நரேந்திர மோடி இருந்து வருகிறார். அவர் அங்குள்ள எந்த கிராமத்திற்கும் செல்லவில்லை. எந்த விவசாயிகளிடமும் நேரில் சென்று பிரதமர் மோடி நலம் விசாரித்தது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.