sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அவல நிலையில் சமூக நலத்துறை ஹாஸ்டல்கள் அரசுக்கு எதிராக சீறிப்பாய்ந்த காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா

/

அவல நிலையில் சமூக நலத்துறை ஹாஸ்டல்கள் அரசுக்கு எதிராக சீறிப்பாய்ந்த காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா

அவல நிலையில் சமூக நலத்துறை ஹாஸ்டல்கள் அரசுக்கு எதிராக சீறிப்பாய்ந்த காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா

அவல நிலையில் சமூக நலத்துறை ஹாஸ்டல்கள் அரசுக்கு எதிராக சீறிப்பாய்ந்த காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா


ADDED : ஜூலை 24, 2024 11:39 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : கர்நாடகாவில் செயல்படும் சமூக நலத் துறை ஹாஸ்டல்களின் அவல நிலையை, தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, சட்டசபையில் நேற்று புட்டு புட்டு வைத்து, அரசு தோல்வி அடைந்துள்ளதாக, சீறிப்பாய்ந்தார்.

கேள்வி நேரத்தின் போது, சட்டசபையில் நடந்த விவாதம்:

காங்., - ரூபகலா: ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் சமூக நலத்துறைக்கு சொந்தமான உறைவிட பள்ளிகளை நம்பி உள்ளனர். குறிப்பாக, எஸ்.சி., - எஸ்.டி., கட்டட தொழிலாளர்களின் பிள்ளைகள் இதை நம்பி உள்ளனர். ஆனால், குறிப்பிட்ட எண்ணிக்கையை மீறி மாணவர்கள் அதிக அளவில் சேருகின்றனர்.

ஒவ்வொரு மாணவருக்கும் அரசு, ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது. பல இடங்களில் தனியார் இடத்தில் வாடகை செலுத்தி ஹாஸ்டல்களை நடத்துகின்றனர். வார்டன் இல்லை; வாட்ச்மேன் இல்லை; உணவு சமைப்பாளர் இல்லை.

மாநிலம் முழுதும் 1 லட்சம் பேருக்கு 300 கோடி ரூபாய்க்கு அதிகமாக ஆண்டுதோறும் அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், தரமான கல்வி வழங்க ஏன் முடியவில்லை. உள்கட்டமைப்பு வசதி அமைப்பதில் அரசு தோல்வி அடைந்துள்ளது.

என் தொகுதியில் ஆய்வு செய்த போது, சுகாதாரமற்ற முறையில் ஹாஸ்டல்களை நிர்வகித்து வருவதை பார்த்தேன். மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

விதிமுறைப்படி மாதந்தோறும் தாசில்தார், ஹாஸ்டல்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, கலெக்டருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். ஆனால், அது நடப்பதில்லை.

இளம் வயது மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லை. தரமான உணவு இல்லை.

சமூக நலத்துறை சார்பில், ஆண்டுதோறும் சமுதாய கூடங்கள் கட்டுவதற்கு, 1,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அங்கு எந்த நல திட்டங்களும் நடப்பதில்லை.

ஆனால், ஹாஸ்டல்கள் கட்ட அரசு நிதி ஒதுக்குவதில்லை. இந்த விஷயத்தில் பாரபட்சம் பார்க்கிறது. 18 மாவட்டங்களில் உணவு சப்ளை செய்வதில், மாவட்ட துணை இயக்குனர்களே ஒப்பந்ததாரர்களாக மாறி உள்ளனர்.

சபாநாயகர் காதர்: உங்களுக்கு என்ன தேவை. கேள்வியை கேளுங்கள். சூழ்நிலையை விளக்காதீர்கள்.

ரூபகலா: மாற்றந்தாய் மனப்பான்மையுடன் அரசு செயல்படுகிறது. நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. கலெக்டர், தாசில்தார், வருவாய் துறை அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, துறையின் முதன்மை செயலர் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.

சபாநாயகர்: உங்கள் கேள்வி என்னவென்று எங்களுக்கு சொல்லுங்கள். பட்ஜெட் மீது பேசுவது போன்று பேச வேண்டாம். தயவு செய்து கேள்வியை கேளுங்கள்.

ரூபகலா: சமூகநலத்துறை ஹாஸ்டல்களில் படுக்கை அறைகள் இல்லை. குளிக்க இடமில்லை. இவ்வளவு மாணவர்கள் மட்டுமே சேர வேண்டும் என்ற விதிமுறையை நீக்குங்கள். குறைகளை சரி செய்ய வேண்டும். பாதுகாப்பான கட்டடங்களை கட்ட வேண்டும். தரமான உணவு வழங்க வேண்டும்.

சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா சார்பில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பிரியங்க கார்கே, பதில் அளித்து பேசியதாவது:

எங்கெங்கு வாடகை கட்டடங்களில் ஹாஸ்டல்கள் இயங்குகின்றன என்பதை கண்டறிந்து, அரசு கட்டங்களில் நடத்த வேண்டும் என்று சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக கல்யாண கர்நாடகா பாகங்களில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னுரிமை எடுக்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயல் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து மாதந்தோறும் 2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும் பணி நடக்கிறது.

தரமான கல்வி கிடைப்பதால் தான், உறைவிட பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.

சமீபத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் ஹாஸ்டல் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தரமான உணவு, தரமான கல்வி, மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க, சம்பந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.

பா.ஜ., - சுரேஷ் குமார்: ரூபகலா மிகவும் நல்ல கேள்வி கேட்டுள்ளார். 20 நாட்களுக்கு முன், சித்ரதுர்காவின் ஹிரியூரில் நவோதயா பள்ளியில் படித்து வந்த 8ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். நான் நேரில் சென்று அதிகாரிகளிடம் விசாரித்தேன்.

மறுநாளே மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியில், 7ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதை அறிந்து, கவுன்சிலிங் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளையாடி மகிழ வேண்டிய காலத்தில், தற்கொலை என்ற மனப்பான்மை வராமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவரும் நம் நாட்டின் சொத்து.

பா.ஜ., - அரக ஞானேந்திரா: எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தை உயர்த்த, சமூக நலத்துறை ஹாஸ்டல்கள் மூலம் தான் முடியும். கல்வி தரம் நன்றாக இருந்தால், மாணவர்கள் அதிகமாக வருவர். மாவட்ட இயக்குனர்களே ஒப்பந்ததாரர்களாக இருக்கின்றனர் என்ற மிக பெரிய தகவலை ரூபகலா கூறி உள்ளார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us