ADDED : மே 24, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி அருகே உள்ள சித்ரி அம்படோலி என்ற கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் நேற்று கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
நான்கு -தொழிலாளர்கள் கிணற்றின் உள்ளே இறங்கி வேலை செய்து கொண்டிருந்த போது, மேலிருந்து மண் சரிவு ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் மண்ணுக்குள் புதைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் மண் அள்ளும் இயந்திரங்கள் எடுத்து வந்து, மேலே சரிந்த மண்ணை அகற்றினர். ஆனால் நான்கு பேரும் ஏற்கனவே மூச்சு திணறி இறந்து போய் இருந்தனர். அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, 100 நாள் வேலை திட்ட கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்தினர்.