தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கர்நாடகாவில் சோலார் மின் திட்ட பிரசாரம் துவக்கம்

கர்நாடகாவில் சோலார் மின் திட்ட பிரசாரம் துவக்கம்

கர்நாடகாவில் சோலார் மின் திட்ட பிரசாரம் துவக்கம்


ADDED : ஜூன் 15, 2024 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2024 04:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்துக்கான பிரசாரம் மாநிலம் முழுதும் நேற்று துவங்கியது.

நாட்டில் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில், சோலார் பேனல்கள் அமைக்க, 'பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரம்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதன் மூலம் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும். இதனால் ஏழை, நடுத்தர மக்களின் மின் கட்டணம் குறையும். இத்திட்டத்தை பெற, கர்நாடகாவில் ஏற்கனவே, 10,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், மின் துறை சார்பில், பெங்களூரில் நேற்று இத்திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில், மின்துறை கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா கொடி அசைத்து, பிரசாரத்தை துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

இத்திட்டத்தை பெற, கர்நாடகாவில் 10,000 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மாநிலத்தில் பெரியளவில் செயல்படுத்த ஆர்வமாக உள்ளவர்கள், வீட்டு உபயோகிப்பாளர்கள், மத்திய அரசின் இணையதளமான pmsuryaghar.gov.in ல் விண்ணப்பிக்கலாம்.

வீட்டில் மேற்கூரையில் சோலார் பேனலை அமைத்தால், 25 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதற்கு கூடுதல் இடம் தேவையில்லை. பராமரிப்பு செலவும் மிக குறைவு.

இத்திட்டம், ஒரு கிலோ வாட் திறன் பேனலுக்கு 30,000 ரூபாயும்; இரண்டு கிலோ வாட் திறன் பேனலுக்கு 60,000 ரூபாய்; 3 கிலோ வாட் திறன் பேனலுக்கு 78,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் இந்தியராக இருக்க வேண்டும்; சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு ஏற்ற கூரை வசதி இருக்க வேண்டும்; வீட்டிற்கு முறையான மின் இணைப்பு பெற்றிருக்க வேண்டும்; சோலார் பேனல்களுக்கு வேறு எந்த மானியமும் பெற்றிருக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

'பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார' திட்ட பிரசாரத்தை, மின்துறை கூடுதல் தலைமைச் செயலர் கவுரவ் குப்தா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இடம்: பெங்களூரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us