ADDED : ஆக 31, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மத்திய அமைச்சரவை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான டி.வி.சோமநாதன், 59, நேற்று பொறுப்பேற்றார்.
மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ் கவுபாவின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அந்த பொறுப்புக்கு தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.சோமநாதனை, கடந்த 10ம் தேதி மத்திய அரசு நியமித்தது.
இந்நிலையில் நேற்று அவர் பொறுப்பேற்றார். அமைச்சரவை செயலர் பதவியில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் நீடிப்பார் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.