ADDED : ஜூன் 10, 2024 05:03 AM
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு 'ஷாக்'
மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்று உள்ள சோமண்ணா, கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்டு தோற்றார். தேர்தலில் தோற்ற பின்னர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன்னிடம் பேசவில்லை என்று ஆதங்கப்பட்டார்.
எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திராவுக்கு எதிராக சில வார்த்தைகளை பயன்படுத்தினார். லோக்சபா தேர்தலில் சோமண்ணாவை ஆதரித்து, எடியூரப்பா பெரிய அளவில் பிரசாரம் செய்யவில்லை.
ஆனால் சோமண்ணாவுக்கு, ம.ஜ.த., தலைவர்கள் கை கொடுத்து, வெற்றி பெற வைத்தனர்.
பா.ஜ., இம்முறை கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்து இருப்பதால், கூட்டணி கட்சிகளுக்கு அதிக அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படும் என்று நினைத்து, கர்நாடகா பா.ஜ., மூத்த எம்.பி.,க்கள் யாரும், அமைச்சர் பதவிக்காக 'லாபி' செய்யவில்லை.
ஆனால் கர்நாடகாவுக்கு 4 அமைச்சர் பதவி கொடுக்க விரும்பிய, பா.ஜ., மேலிடம் சோமண்ணாவுக்கு வாய்ப்பு கொடுத்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத, எடியூரப்பா 'ஷாக்' ஆகி உள்ளார்.

