தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது

தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது

தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது


ADDED : ஏப் 25, 2024 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 11:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே: தாயின் தற்கொலைக்கு காரணமான தந்தையை, வெட்டி கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

தாவணகெரே, ஜகளூரின் லக்கிம்புரா கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சினப்பா, 60. இவரது மனைவி தப்பம்மா, 52. தம்பதிக்கு ரமேஷ், 28, என்ற மகன் உள்ளார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அஞ்சினப்பா, தினமும் மனைவியை அடித்து துன்புறுத்தினார்.

இவரை திருத்த மனைவி முயற்சித்தும் முடியவில்லை. கணவரின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்ததால், மனம் விரக்தி அடைந்த தப்பம்மா, சில நாட்களுக்கு முன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாயின் தற்கொலைக்கு, தந்தையே காரணம் என, மகன் ரமேஷ் கொதிப்படைந்தார். இது தொடர்பாக, தந்தைக்கும், மகனுக்கும் நேற்று காலை வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த மகன், தந்தையை வெட்டி கொலை செய்தார். ஜகளூரு போலீசார், ரமேஷை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us